உரிய தகவல் வழங்காத அரசு அதிகாரிகள் மீதான வழக்கு - மாநில தகவல் ஆணையர் விசாரணை
சேலத்தில் உரிய தகவல் வழங்க மறுத்த அரசு அதிகாரிகள் மீதான வழக்கு தொடர்பாக மாநில தகவல் ஆணையர் விசாரணை நடத்தினார்.
அரசு துறைகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் பெறப்பட்டு வருகின்றனர். இதில் உரிய தகவல் அளிக்காத அலுவலர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 13 வழக்குகள் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக மாநில தகவல் ஆணையர் முருகன் சேலத்திற்கு வருகை தந்தார். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர்கள் மற்றும் வழக்கு தொடர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
Next Story