72 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மின்சார வசதி பெற்ற பழங்குடியினர் கிராமம்

சுதந்திர இந்தியாவில் கடந்த 72 ஆண்டுகளாக மின் வசதியின்றி தவித்து வந்த நெல்லை பழங்குடியினர் கிராமம் முதல் முறையாக மின்சார வசதி பெற்றுள்ளது.
72 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மின்சார வசதி பெற்ற பழங்குடியினர் கிராமம்
x
பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சின்ன மயிலாறு, காரையார் காணிக்குடியிருப்பு பகுதிகளுக்கு சுற்றுச்சூழலின் பாதுகாப்பை காரணம் காட்டி மின் இணைப்பு நிராகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய மாநில வன பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியோடு  48 வீடுகளுக்கு முதல் முறையாக  மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வாழும் பழங்குடியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்