விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் தலைமையில் பூஜை - 64 சிவாச்சாரிய தம்பதிகள் மழை வேண்டி பிரார்த்தனை
மழை வேண்டி ஸ்ரீ காஞ்சி காமகோடி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் தலைமையில் 64 சிவாச்சாரிய தம்பதிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மழை வேண்டி ஸ்ரீ காஞ்சி காமகோடி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் தலைமையில் 64 சிவாச்சாரிய தம்பதிகள், சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் மதுரவாயலில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஸ்ரீ காஞ்சி காமகோடி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் தலைமையில் கணபதி பூஜை, ருத்ர பாராயணம், வருணஜபம் மற்றும் 64 சிவாச்சாரியர்கள் தங்கள் துணைவியுடன் அமர்ந்து சிறப்பு பிரார்த்தனை, பூஜையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பைரவர் பூஜையும் நடைபெற்றது. இந்த பூஜைக்காக 26 தலைகள் மற்றும் 48 கரங்கள் கொண்ட சிவன் பார்வதியின் பிரமாண்ட உருவம் அமைக்கப்பட்டு இருந்தன.
Next Story