மருந்து பொருட்களை திருடிய கும்பல் : போதைப்பொருளாக மாற்றியது அம்பலம்

2 ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருளாக மாற்றுவதற்காக, மருந்துபொருட்களை திருடிய 4 பேர், போலீசார் வசம் சிக்கியுள்ளனர்
மருந்து பொருட்களை திருடிய கும்பல் : போதைப்பொருளாக மாற்றியது அம்பலம்
x
2 ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருளாக மாற்றுவதற்காக, மருந்துபொருட்களை திருடிய 4 பேர், போலீசார் வசம் சிக்கியுள்ளனர். சென்னை திருவான்மியூரில் மருந்து தாயாரிக்கும் நிர்வாகி ஒருவரின் வீட்டில் 4 பேர் கொண்ட கும்பல்,  ரகளையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல்கிடைத்துள்ளது. அவர்களிடம் விசாரித்தபோது, அனைவரும் விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவருவது தெரிய வந்துள்ளது. இவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு, மலேசியாவிற்கு கொண்டுசெல்லவிருந்த மருந்துபொருட்களை திருடியதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. அந்த மருந்துபொருட்களை போதை பொருளாக மாற்றி விற்பனை செய்த‌தாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தினேஷ், குமரன், ரவி, ஆண்டோஜோசப் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்