கழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
கழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
x
சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதில் சேலம் ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 46 பேரும், தர்மபுரியில் 9 பேரும், ஜோலார்பேட்டையில் 35 பேரும், காட்பாடியில் 25 பேரும், ஓசூரில் 9 பேர் என மொத்தம் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் - விருத்தாசலம் மார்க்கத்திலும், சேலம் - ஜோலார்பேட்டை மார்க்கத்திலும் ரயில்வே தண்டவாளத்தை சுற்றி குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ரயிலில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குடியிருப்புவாசிகள் தண்டவாளத்தை கழிப்பறையாக உபயோகிக்கும் போது தான் அதிகம் பேர் ரயிலில் அடிபட்டு பலியாகின்றனர், முக்கியமாக காலை பொழுதில். 

இதனை தவிர்க்க ரயில்வே துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன . இருப்பினும் விழிப்புணர்வுகள் தண்டவாளத்தை கழிப்பறையாக பயன்படுத்த நினைக்கும் மக்களின் கவனத்தை பெற இயலவில்லை என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். அறிவிப்பு பலகைகள், எச்சரிக்கை பலகைகள் தண்டவாளத்தை ஒட்டிய கிராம பகுதிகளில் வைத்தும், கடந்த 4 மாதத்தில் 124 பேர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.

இதை தடுக்கும் நோக்கத்தில் அடுத்தக்கட்டமாக ரயிலிலேயே ரோந்து சென்று பயணிகளிடம் அறிவுறுத்தப்படுகிறது. விழிப்புணர்வுகள் பல வகைகளில் ஏற்படுத்தினாலும் மக்கள் அதை அலட்சியமாக கடந்து செல்வதால் உயிர் பலிகள் அநாவசியமாக ஏற்படுவது வேதனையானது. 

Next Story

மேலும் செய்திகள்