திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாரிகள் துணையோடு மணல் திருட்டு - பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வருவாய் அதிகாரிகள் துணையோடு மணல் கொள்ளை நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாரிகள்  துணையோடு மணல் திருட்டு - பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கவுண்டமாநதியில் இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ளப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.கவுண்டமாநதியில் 15 அடி வரை மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.பலமுறை புகார் தெரிவித்தும்,வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், கவுண்டமாநதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் அருகே தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் பாலம் பலமிழக்கும் ஆபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்