கியர் பாக்ஸ் உடைந்து நடுவழியில் நின்ற அரசு பேருந்து
கோவை மாவட்டம் காந்திபுரம், உக்கடம் வழியாக ஈச்சனாரி சென்ற அரசு பேருந்து பழுதாகி பாதி வழியில் நின்றதால், பயணிகள் சிரமத்திற்குள்ளாயினர்.
கோவை மாவட்டம் காந்திபுரம், உக்கடம் வழியாக ஈச்சனாரி சென்ற அரசு பேருந்து பழுதாகி பாதி வழியில் நின்றதால், பயணிகள் சிரமத்திற்குள்ளாயினர். பேருந்தின் கியர்பாக்ஸ் உடைந்ததால், அது மேற்கொண்டு நகர முடியாமல், நின்றது. இதனால் மற்ற வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனையடுத்து போக்குவரத்து கழகத்தின் பழுது பார்ப்பவர் பேருந்தை சரிசெய்ததை அடுத்து சாலையின் ஓரத்தில் பேருந்தை தள்ளி நிறுத்தப்பட்டது. பேருந்தின் இருக்கைகள், படிக்கட்டுகள் உள்ளிட்டவையும் சேதமாகி இருந்ததை பார்த்த பொதுமக்கள் அரசு பேருந்துகள் முறையாக பராமரிப்பதில்லை என புகார் தெரிவித்தனர்.
Next Story