சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் : நாள்தோறும் மக்கள் பணி ஆற்றிட உறுதியேற்பு

சென்னை அண்ண அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிதாக வெற்றிபெற்ற திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் : நாள்தோறும் மக்கள் பணி ஆற்றிட உறுதியேற்பு
x
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு, தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மற்றும் புதுச்சேரி மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 2 கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 வாக்குகளை இந்தக் கூட்டணிக்கு அளித்தது, உலகத் தமிழர் ஒவ்வொருவரையும் பெருமிதம் கொள்ள வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் உரிமைகளை மீட்கவும், நாட்டில் உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்கவும், மதச்சார்பின்மையைப் பாதுகாத்திடவும், நாள்தோறும் மக்கள் பணி ஆற்றிடவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் உறுதியெடுத்துக் கொள்ளப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்