ஓசூர் அருகே சூறைக்காற்றுடன் மழை - வீடுகள் சேதம்

ஓசூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழை காரணமாக, பல்வேறு கிராமங்களில் வீடுகள் மற்றும் மரங்கள், சேதமாகியுள்ளன.
ஓசூர் அருகே சூறைக்காற்றுடன் மழை - வீடுகள் சேதம்
x
ஓசூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழை காரணமாக, பல்வேறு கிராமங்களில் வீடுகள் மற்றும் மரங்கள், சேதமாகியுள்ளன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால், கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் திடீர் மழை பெய்தது. அதேபோல தேன்கனிகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள அய்யூர், உனிசெட்டி, கெத்தள்ளி ஆகிய கிராமங்களிலும் பலத்த சூறாவளி காற்றுடன் திடீர் மழை பெய்தது. இந்த திடீர் மழையால் 3 கிராமங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளின் மேற்கூரைகள் சேதமாகியுள்ளன. அதேபோல கிராமத்தில் உள்ள மரங்களும், மின்கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் தங்களது வீடுகளில் தங்க முடியாமல் உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் இருளில் பரிதவித்தனர். இதனை தொடர்ந்து மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்