பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - அபராதம் விதிப்பு
மதுராந்தகத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட அதிரடி ஆய்வில் பல கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் மார்க்கெட் பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் சோதனை நடைபெற்றது. அதில் சுமார் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் சிக்கின. அவற்றை தீயிட்டு கொளுத்திய அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
Next Story