விமான நிலைய சுற்றுச்சுவரை சேதப்படுத்திய விமானம் : பைலட்டின் உரிமம் தற்காலிகமாக ரத்து

திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக, பைலட் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கமாறு ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமான நிலைய சுற்றுச்சுவரை சேதப்படுத்திய விமானம் : பைலட்டின் உரிமம் தற்காலிகமாக ரத்து
x
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாய்க்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம், ஓடுதளத்தில் இருந்து பறக்க முற்பட்டபோது தாழ்வாக சென்று, விமான நிலைய சுற்றுச்சுவரில் இடித்ததால் விமானத்தின் அடிப்பாகம் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்திய அதிகாரிகள், விமானத்தின் பைலட்டாக பணிபுரிந்த சென்னையை சேர்ந்த கணேஷ்பாபுவின் பைலட் உரிமத்தை மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ரத்து செய்து கடந்தாண்டு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பைலட் கணேஷ்பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பயணிகள் எவரும் புகார் அளிக்காத நிலையில், இந்த சம்பவத்தை விபத்தாக கருதி உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்துள்ளது சட்டவிரோதமானது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் பணிவழங்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி, புதுடில்லி விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்