"அ.தி.மு.க. அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது" : பெரும்பான்மையை தக்க வைக்கும்
இடைத்தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் அதிமுக அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது.
234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டப்பேரவையில், தற்போது அதிமுகவுக்கு சபாநாயகரை சேர்த்து 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரை சேர்த்தால் அதிமுகவின் பலம் 114 ஆகும். இந்த 3 பேரில் தனியரசு தவிர மற்ற 2 பேரும் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் இருப்பதாக தெரிகிறது. இதுபோல, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி , பிரபு, கலைச்செல்வன் ஆகிய 3 பேரும் தினகரன் ஆதரவாளர்களாக கருதப்படுகிறது. இதனால், அதிமுகவின் பலம் 109ஆக குறைகிறது. இந்நிலையில், இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெறுவதால் அதிமுகவின் பலம் 118ஆக உயரும். இது தனிப்பெரும்பான்மைக்கு போதுமானது என்பதால் தமிழகத்தில் அதிமுக அரசுக்கு ஆபத்து இல்லை.
Next Story