தமிழகத்தில் கட்சிகளின் வாக்கு சதவீதம் : தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்த புள்ளி விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கட்சிகளின் வாக்கு சதவீதம் : தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்
x
ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களில், 32 புள்ளி 76 சதவீத வாக்குகளுடன் திமுக முதலிடத்தில் உள்ளது. அதிமுக வாக்கு வங்கி கணிசமாக குறைந்து 18 புள்ளி 48 சதவீதமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 12 புள்ளி 76 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி 5 புள்ளி 42 சதவீத வாக்குகளையும், பாரதிய ஜனதா கட்சி 3 புள்ளி 66 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 புள்ளி 43 சதவீத ஓட்டுகளும், மார்க்சிஸ்ட் கட்சி 2 புள்ளி 40 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. தேமுதிக 2 புள்ளி 19 சதவீத வாக்குகளையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 1 புள்ளி 11 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. இதர கட்சிகள் 17 புள்ளி 11 சதவீத வாக்குகளை பகிர்ந்து கொண்டுள்ளதுடன், நோட்டாவுக்கு 1 புள்ளி 28 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. 

  • திமுக       32.76 %
  • அதிமுக    18.48 %
  • காங்கிரஸ் 12.76 %
  • பாமக         5.42 %
  • பாஜக        3.66 %
  • சிபிஐ         2.43 %
  • சிபிஎம்          2.40 %
  • தேமுதிக         2.19 %
  • முஸ்லீம் லீக்    1.11 %
  • இதர கட்சிகள்   17.11 % 
  • நோட்டா            1. 28 %


Next Story

மேலும் செய்திகள்