பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வெற்றி

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வெற்றி
x
நீண்ட இழுபறிக்கு பின் அதிகாலை 4 மணிக்கு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மொத்தம் 22 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 1 லட்சத்து 6 ஆயிரத்து 394 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ராஜேஷ் 38 ஆயிரத்து 371 வாக்குகள் பெற்றிருந்தார். இதன் படி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 68 ஆயிரத்து 23 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்