மத்திய சென்னை, திருச்சியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி

மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
மத்திய சென்னை, திருச்சியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி
x
மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். மொத்தம் பதிவான 7 லட்சத்து 85 ஆயிரத்து 450  வாக்குகளில்,  தயாநிதி மாறன் 4 லட்சத்து 48 ஆயிரத்து 911 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க.,வேட்பாளர் சாம் பால், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா நாசர் மற்றும் நாம் தமிழர் கட்சி, அமமுக கூட்டணி உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும்  டெபாசிட்டை இழந்தனர். வட சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி 4 லட்சத்து 61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. உள்ளிட்ட 22 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர். இதே போல, திருச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க.,மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உட்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்