பாஜக, காங்கிரசுக்கு அடுத்த கட்சி திமுக...?

நாடாளுமன்ற மக்களவையில் 3வது பெரிய கட்சி என்ற பெருமையை திமுக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக, காங்கிரசுக்கு அடுத்த கட்சி திமுக...?
x
நாடாளுமன்ற தேர்தலில் நள்ளிரவு நிலவரப்படி வெற்றி மற்றும் முன்னணியை சேர்த்து 303 இடங்களுடன் அசுர பலத்துடன் பாஜக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக, 52 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இந்நிலையில், 3வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுக, விசிக வேட்பாளர்களையும் சேர்த்தால் திமுகவின் பலம் 23ஆகும்.  அதேநேரத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரசும், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசும் தலா 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மூன்று கட்சிகளுக்கு இடையே 3வது இடத்தை பிடிக்க போட்டி எழுந்துள்ள நிலையில், முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே, யாருக்கு அந்த பெருமை கிடைக்கும் என தெரியும்.

Next Story

மேலும் செய்திகள்