மார்டின் நிறுவன ஊழியர் உயிரிழந்த விவகாரம் : விசாரணையை துவக்கினார் நீதிபதி

கோவையில் தொழிலதிபர் லாட்டரி மார்டின் நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், அந்நிறுவன காசாளர் பழனிசாமி காரமடை அருகேயுள்ள குட்டையில் கடந்த மே 3ம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மார்டின் நிறுவன ஊழியர் உயிரிழந்த விவகாரம் : விசாரணையை துவக்கினார் நீதிபதி
x
கோவையில் தொழிலதிபர் லாட்டரி மார்டின் நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், அந்நிறுவன காசாளர் பழனிசாமி காரமடை அருகேயுள்ள குட்டையில் கடந்த மே 3ம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரி பழனிசாமியின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து விசாரணை அதிகாரியாக கோவை 8வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த அவர், பிணவறையில் பாதுகாக்கப்பட்டுள்ள பழனிசாமியின் உடலை பார்வையிட்டதோடு, உடற்கூராய்வு அறிக்கை மற்றும் மருத்துவ சான்றிதழ்களை ஆய்வு செய்தார். மீண்டும் மறு உடற்கூராய்வு நடத்த வேண்டுமென பழனிசாமியின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்