கர்நாடகா வந்தடைந்தது கோதண்டராமர் சிலை : 7 மாதங்களாக தமிழகத்தில் பயணித்தது

பிரமாண்ட கோதண்டராமர் சிலை, 7 மாத பயணத்துக்கு பின் கர்நாடகா வந்தடைந்தது.
கர்நாடகா வந்தடைந்தது கோதண்டராமர் சிலை : 7 மாதங்களாக தமிழகத்தில் பயணித்தது
x
திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலையில் இருந்து 350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை செதுக்கப்பட்டது. இந்த  சிலையை கர்நாடகாவிற்கு எடுத்து செல்ல பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. பேரண்டப்பள்ளி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தற்காலிக மண்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்ததும், அங்கு 12 நாட்களாக காத்திருந்த சிலை, நள்ளிரவில் ஆற்றை கடந்து, ஒசூர்,  மூக்கண்டப்பள்ளி, ஜூஜூவாடி பகுதிகள் வழியாக கர்நாடகா  எல்லையான அத்திப்பள்ளிக்கு சென்றது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வரவேற்றனர். கடந்த 7 மாதமாக தமிழக எல்லையை சிலை கடக்க உதவியர்களுக்கு  நன்றி தெரிவித்து கொண்டனர்

Next Story

மேலும் செய்திகள்