"இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகத்தில்  வெப்பம் அதிகரித்து ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அனல் காற்று வீசும் என்றும், பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை  தவிர்த்து கொள்ளுமாறும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன்காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்