அமித் ஷா தலைமையில் நாளை மாலை பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
அமித் ஷா தலைமையில்  நாளை மாலை பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம்
x
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என  கூறப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை இரவு 7.30 மணிக்கு பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பை ஏற்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு செல்கிறார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் டெல்லி செல்கிறார்.இதற்கிடையே, தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக வெற்றி பெறும் அனைவரும் மே 24 அன்று டெல்லியில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்