அரசு கல்லுாரிகளில் அதிகரிக்கும் போலி ஆசிரியர்கள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், போலி கல்வி சான்றிதழ்கள் மூலம் பேராசிரியர் பணியில் சேர்ந்துள்ள அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
x
11 போலி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏராமாளனோர் ஊடுருவியிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 280க்கும் மேலும் 600க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அவற்றில் பேராசிரியர்களாக சேர பி.ஹெச்.டி. நிறைவு செய்திருக்க வேண்டும். அல்லது மத்திய, மாநில அதாவது நெட் ஸ்லெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது பல்கலைக் கழக மானியக்குழு விதி. ஆசிரியர் ஒருவரை அரசு பணிக்கு அனுமதிக்கும் முன் அவரது கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்பதும் யூ.ஜி.சி. விதி. ஆனால் இந்த விதிமுறைகளை எளிதாக  தாண்டி போலி பி.எச்.டி. மூலம் கல்லூரி ஆசிரியர் பணிக்கு வந்த 11 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி. சான்றிதழ் சரிபார்த்தல் உண்மைத் தன்மையை அறிதல் என பல்வேறு படிநிலைகளை கடந்து இந்த 11 பேர் ஆசிரியர் பதவிக்கு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பணி நீக்கம் செய்யாமல் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பட்டதாரிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணிக்கு அனுமதிக்கும் முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு நடந்ததா இல்லையா? ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? சான்றிதழ் சரிபார்ப்பில் ஏன் தாமதம்? என பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளனர் கல்வியாளர்கள். போலிகளை அனுமதிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை. மேகாலயா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள சில தனியார் பல்கலைக் கழகங்கள் போலி பட்டங்களையும் பி.எச்.டி., சான்றிதழ்களையும் லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் கொடுமையை சுட்டிக்காட்டும் கல்வியாளர்கள் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை. பலமான விதிமுறைகளை உடைத்து எளிதாக பணியில் சேர்வது என்பது கடின உழைப்பு மூலமும் தகுதியான கல்வி அறிவுடனும் ஆசிரியர் பணிக்கு வர விரும்பும் ஏழைகளை பின்னுக்கு தள்ளுவது மிகப்பெரிய கொடுமை...


Next Story

மேலும் செய்திகள்