விளையாட்டு துப்பாக்கியால் விபரீதம் : பால்ரஸ் குண்டு பாய்ந்து 17 வயது மாணவர் படுகாயம்
பதிவு : மே 18, 2019, 02:01 AM
விளையாட்டுத் துப்பாக்கியால் சுட்டத்தில் 17 வயது மாணவர் படுகாயமடைந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பொன்னம்மாபேட்டை, சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் மாணவர், தனது நண்பர்களுடன் அங்குள்ள  முனியப்பன் கோவில் பகுதியில் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில், நேற்று விளையாடிக் கொண்டிருந்த  போது, நண்பர் ஒருவர் தனது வீட்டிலிருந்து பலூன் சுடும் விளையாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மாணவருக்கு முதுகு பகுதியில் பால்ரஸ் குண்டு  பாய்ந்துள்ளது. அதில் படுகாயமடைந்த அவர்,  தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த சேலம் அம்மாப்பேட்டை போலீசார்,  மாணவர்கள் பயன்படுத்திய  விளையாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்ததுடன்,  நண்பர்கள் 3 பேரையும் விசாரித்து வருகின்றனர். விளையாட்டு விபரீதமான சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.