நீரின்றி தவிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகள் : நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்

திருத்தணி அருகே கோதண்டராமபுரம் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதோடு, கால்நடைகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.
நீரின்றி தவிக்கும் மக்கள் மற்றும் கால்நடைகள் : நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
x
கோதண்டராமபுரம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பெரும்பாலோனோர் பால் உற்பத்திக்காகவும், விவசாய பயன்பாட்டிற்காகவும் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த 3 நாட்களாக முறையாக குடிநீர் வழங்காததால், பொதுமக்களும், கால்நடைகளும் தண்ணீருக்காக பல மைல் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இது குறித்தும் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் திருத்தணியில் இருந்து நல்லாட்டூர், நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த திருத்தணி வட்டாட்சியர் செங்கல்லால் மற்றும் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்