மரத்திலிருந்து திடீரென விழுந்த குரங்கள் : இறந்தும் குட்டிகளை காப்பாற்றிய தாய் குரங்குகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இறந்தும் குரங்குகள் தங்களது குட்டிகளை காப்பாற்றியது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரத்திலிருந்து திடீரென விழுந்த குரங்கள் : இறந்தும் குட்டிகளை காப்பாற்றிய தாய் குரங்குகள்
x
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் வருவது வழக்கம். இந்நிலையில் குடியிருப்புக்கு அருகில், மரத்தில் இருந்த குரங்குகள் திடீரென உச்சியிலிருந்து ஒவ்வொன்றாக கீழே விழுந்துள்ளது. பல அடி உயரத்திலிருந்து விழுந்ததில், சில குரங்குகள் உயிரிழந்தன, சிலவை மயக்க நிலையில் இருந்தன. இதில் கீழே விழுந்த தாய்க்குரங்கள் தங்கள் குட்டிகளை கட்டிப்பிடித்தபடி விழுந்துள்ளன. இந்நிலையில், தாய் குரங்குகள் இறந்திருந்தாலும், அவை கட்டிப்பிடித்திருந்த குட்டி குரங்குகளுக்கு சிறு காயம் கூடவில்லை.  இதில் 4 குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக 6 பெண் குரங்குகள் மற்றும் 3 ஆண் குரங்குகள் என மொத்தம் 9 குரங்குகள் உயிரிழந்தன. இது குறித்து மக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் குரங்குகளை மீட்டு, விசாரித்து வருகின்றனர். நஞ்சு கலந்த உணவை உண்டதால் குரங்கள் கீழே விழுந்திருக்கலாம் என்று சந்தேகத்தின அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்