செல்போன் திருடனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு : ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை
பதிவு : மே 17, 2019, 03:27 PM
பழனியில் திருட்டு வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த இளைஞர், சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பத்ரா தெருவை சேர்ந்த 20 வயதான இருளப்பன், செல்போன் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வழக்குகளில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், ஜாமீனில் வெளிவந்ததுடன், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். வழக்கம் போல் இன்று பழனி நகர காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு திரும்பினார். திடீரென அவரை வழிமறித்த கும்பல், இருளப்பனின் கை, கால்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். சம்பவம் அறிந்து வந்த போலீசார், ரத்தம் சொட்ட சொட்ட வெட்டுக் காயங்களுடன் துடித்த இருளப்பனை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், மர்மநபர்கள் யார் என தெரியாமல் இருந்த நிலையில், இருவர் சரணடைந்துள்ளனர். நகர காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பொதுமக்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களா, சிறையில் இருக்கையில் ஏற்பட்ட தகராறா என்பது குறித்த எந்த விவரமும் 
தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1452 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4871 views

பிற செய்திகள்

திருச்சி அருங்காட்சியக சிலை திருட்டு வழக்கு : விசாரணையில் வெளியான தகவல்கள்...

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் குமாரிடம் ரகசிய விசாரணையில் வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேர் குறித்தும் மாயமான சிலைகள் குறித்தும் சில முக்கிய தகவல்கள் வெளியிட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

4 views

சேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

5 views

அமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.

9 views

இளஞ்சிவப்பு நிறப்பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்...

அத்திவரதர் உற்சவத்தின் 21வது நாளான இன்று, அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் காட்சி தந்து வருகிறார்.

27 views

"நதிகள் மீட்பு பயணம் 100 சதவீதம் வெற்றி" - ஜக்கி வாசுதேவ்

"காவேரி கூக்குரல்" திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் ஈஷா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

18 views

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான்... ரூ.18 லட்சம் நிதி திரட்டல்

சென்னை பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.