கமல்ஹாசனுக்கு எதிராக கோஷம் - 11 பேர் கைது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், கமல் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலாட்டா செய்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
கமல்ஹாசனுக்கு எதிராக கோஷம் - 11 பேர் கைது
x
திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து, சன்னதி தெருவில் அக்கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு வேட்பாளரை ஆதரித்து பேசினார். அப்போது,  கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொடியை ஏந்தியவாறு, கமல்ஹாசனுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டதால், பொதுக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்