துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி : 500 பேர் பங்கேற்க அனுமதி

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்து கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி : 500 பேர் பங்கேற்க அனுமதி
x
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கிளாஸ்டன், தமிழரசன், கார்த்திக், ரஞ்சித், ஜெயராமன் ஆகியோர் குடும்பம் சார்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதே போல ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியன்னரசும் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, தண்டபாணி அமர்வு, மே 22 ஆம் தேதி பெல் ஹோட்டலில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடக்கும் நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்து கொள்ளலாம் என உத்தரவிட்டனர். நிகழ்வு முழுவதையும் மனுதாரர் மற்றும் காவல்துறை ஆகிய இருதரப்பும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், நிகழ்வில் கலந்து கொள்வோரின் பட்டியலை நிகழ்வு முடிந்த பின்னர் தூத்துக்குடி எஸ்.பி.யிடம் வழங்க வேண்டுமென்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்