"தென்மேற்கு பருவமழை ஜூன்- 6 ந்தேதி துவங்கும்" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை அடுத்த மாதம் ஆறாம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன்- 6 ந்தேதி துவங்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தென்மேற்கு பருவமழை அடுத்த மாதம் ஆறாம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் அதிகபட்சமாக, நான்கு செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம், தர்மபுரி மற்ற பிற இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் வீதம் மழை பதிவாகி உள்ளது. சேலம், தர்மபுரி, திருச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாதம் நீடிக்கும் தென்மேற்கு பருவமழை காலம்



தென்மேற்கு பருவமழை இந்தாண்டு கேரள கடலோர பகுதியை ஜூன் 6 ஆம் தேதி அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி கேரள கடலோர பகுதியை எட்டும் தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் காலதாமதமாகும் என கணிக்கப்பட்டு உள்ளது. இது ஒரு வேளை நாட்கள் முன்பின்னாக இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு அமையம் தெரிவித்துள்ளது. நான்கு மாத காலம் நீடிக்கும் தென்மேற்கு பருவ மழை முந்த கூடிய சூழ்நிலை, அந்தமான் கடல் பகுதி, நிகோபர் தீவுகள், தென் கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் வரும் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில்  உருவாக ஏற்ற நிலை உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்