தவறவிட்ட நகை பை : ஆட்டோவில் வந்து திருடிய நபர்கள்
பதிவு : மே 15, 2019, 03:00 PM
சென்னை அண்ணாசாலையில் தவற விட்ட நகை பையை சி.சி.டிவி காட்சிகளை வைத்து சென்னை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான் சாகிப் தெருவை சேர்ந்தவர் பிரியா. கடந்த 4ஆம் தேதி அவரும், அவரின் மாமியாரும் அண்ணா சாலை வழியாக ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது தனது கையில் வைத்திருந்த நகைகளை தவறவிட்டுள்ளார். நீண்ட நேரம் தேடிப்பார்த்தும் நகை பை கிடைக்காததால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் கொடுத்த இரவில் இருந்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு நகை பையை போலீசார் தேடி வந்துள்ளனர். தாராப்பூர் டவர்ஸ் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது அப்பகுதியாக வந்த சரக்கு ஆட்டோவில்  இருந்த நபர் ஒருவர் கீழே இறங்கி சாலையில் கிடந்த நகை பையை எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது. தொடர்ந்து ஆட்டோ செல்லும் வழியை ஆய்வு செய்ததில் கொத்தவால் சாவடியில் அந்த ஆட்டோ நின்றதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஆட்டோ டிரைவர் பார்த்தசாரதி மற்றும் அவருடன் இருந்த கலைச்செல்வன் ஆகியோரிடம் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் நகையை எடுத்து சென்றது உறுதியானது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 19 சவரன் நகையை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

435 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

2198 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

553 views

பிற செய்திகள்

9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி

ஒன்பது வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கும் கோமாளி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.

2 views

திருமணத்திற்கு பின்னர் ஆர்யா நடிக்கும் "டெடி"

திருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிக்கும் டெடி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 views

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கிய ஒன்றான பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் இன்று பாரிஸ் நகரில் தொடங்குகிறது.

5 views

"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்

திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.

8 views

சென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

சென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 views

நாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.

209 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.