விழுப்புரம் அருகே இருபிரிவினர் இடையே மோதல்

விழுப்புரம் அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் சாலை மறியல் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே இருபிரிவினர் இடையே மோதல்
x
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கமலகண்ணி அம்மன் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாட்டு கச்சேரி நடைபெற்றது. 
அப்போது குறிப்பிட்ட பிரிவினர் தொடர்பான பாடல் பாடப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரிவினர், கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பாட்டு கச்சேரி தொடர்ந்த நிலையில்,  ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் மற்றொரு பிரிவினர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து கல் வீசியும் ,  மோட்டார் சைக்கிள், கார்,  வீடு, குடிநீர் தொட்டி உள்ளிட்டவற்றை  அடித்தும் சேதப்படுத்தினர். 

இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு பிரிவினர் செஞ்சி விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டினர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்