குடிநீருக்கு அல்லாடும் கிராம மக்கள் : இடுகாடு அருகே குழாயில் வழிந்தோடும் தண்ணீர்

திண்டுக்கல் அருகே குடிநீருக்கு அல்லாடும் பொதுமக்கள் இடுகாடு அருகே வழிந்தோடும் தண்ணீரை பிடித்து செல்வது வேதனை அளிக்கிறது.
குடிநீருக்கு அல்லாடும் கிராம மக்கள் : இடுகாடு அருகே குழாயில் வழிந்தோடும் தண்ணீர்
x
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையாக வறட்சி 
நிலவி வருகிறது. இதனால் பல பகுதிகளில் பொது மக்கள் குடிநீருக்காக அல்லாடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டியில் கடந்த ஒரு மாதமாக குடிக்க தண்ணீர் இன்றி மக்கள் மிகவும் சிரமப்பட்டு 
வருகின்றனர். அங்குள்ள இடுகாடு அருகே குழாயில் வழிந்தோடும் 
தண்ணீரை குடிப்பதற்காக  பிடித்து செல்கின்றனர். ஆத்தூர் அணையிலிருந்து  திண்டுக்கல்லுக்கு குடிநீர் செல்லும் அந்த குழாயில் தண்ணீர் பிடிக்க மக்கள் ஆபத்தான  சாலையோரம் நிற்பது வேதனை அளிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள்  தெரிவிக்கின்றனர். ஆரியநல்லூர், கும்மம்பட்டி, கல்லுக்கடை, பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு தண்ணீர் பிடிக்க வருவதாகவும்  கூறும் பொதுமக்கள் அப்பகுதியில் குழாய்கள் அமைத்து குடிநீர் கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்