குடிநீர் வழங்க கோரி தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்...
பதிவு : மே 14, 2019, 04:41 PM
தாராபுரம் அடுத்த மரவாபாளைம் கிராமத்திற்கு குடிநீர் வழங்க கோரி, கிராம மக்கள் தாராபுரம் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தாராபுரம் அடுத்த மரவாபாளைம் கிராமத்திற்கு குடிநீர் வழங்க கோரி, கிராம மக்கள் தாராபுரம் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள பெரும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும், குறைந்த அளவு வரும் குடிநீரும் உப்பு தண்ணீர் கலந்து வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று 50க்கும் மேற்பட்டோர், சுத்தமான குடிநீர், உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று கூறி தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  

பிற செய்திகள்

சவூதி அரேபியா, கத்தார் நாட்டில் இருந்து 340 பேர் சென்னை வருகை

கொரோனா ஊரடங்கால் சவூதி அரேபியா, கத்தார் நாட்டில் சிக்கிய 340 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர்.

23 views

நேரு வீதி மார்க்கெட்டில் ஆட்சியர் ஆய்வு

திண்டிவனம் நேரு வீதியில் அமைந்துள்ள மார்கெட் பகுதியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீரென ஆய்வு செய்தார்.

7 views

குப்பைக் கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு - மூச்சுத் திணறலால் பொதுமக்கள் அவதி

சிதம்பரத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு, மர்ம நபர்கள் தீ வைத்த சில மணி நேரத்தில், அணைக்கப்பட்ட நிலையில், அந்த குப்பையில், மீண்டும் தீ பற்றியதால், பொதுமக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.

6 views

முதலமைச்சர் பழனிசாமிக்கு மத்திய அமைச்சர் கடிதம்

ஜல் ஜீவன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தேவையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

57 views

8-ம் தேதி திறக்கப்பட உள்ள மால்கள் - வழிகாட்டுதல் நெறி முறையை வெளியிட்டது சுகாதார அமைச்சகம்

எட்டாம் தேதி திறக்கப்படும் மால்கள் ஹோட்டல்கள், வழிபாட்டு தலங்களுக்கான வழிகாட்டுதல் முறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

591 views

வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை மையம் - தமிழகத்தில் அமைக்க கோரி வழக்கு

தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை மையத்தை அமைக்க உத்தரவிடக்கோரி ஜீவகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.