பூண்டி உள்ளிட்ட 4 ஏரிகளில் 1.71% நீர் இருப்பு : குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடு

சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான விளங்கும் பூண்டி உள்ளிட்ட நான்கு ஏரிகளில் 1 புள்ளி ஏழு ஒன்று சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
பூண்டி உள்ளிட்ட 4 ஏரிகளில் 1.71% நீர் இருப்பு : குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடு
x
3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில், தற்போது 143 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் 4 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் வறண்டு தற்போது 1 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி கொண்ட புழல் ஏரியில், வெறும் 45 மில்லியன் கன அடி மட்டுமே நீர்இருப்பு உள்ளது. நான்கு ஏரிகளும் வறண்டு கிடப்பதால், சென்னையின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து தினமும் 90 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. மேலும், நெய்வேலி நீர்படுகையில் இருந்து 90 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னை மாநகருக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்