"ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டம்" - நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் பெற்று வருகிறது.
ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டம் - நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
x
ஈரோடு கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் பெற்று வருகிறது. இந்நிலையில் கூகலூர் ,புதுக்கரைபுதூர், மேவாணி, கருங்கரடு உள்ளிட்ட பகுதிகளில் நெல்அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக நெல் அறுவடை தொடங்கும்போதே மாவட்டம் முழுவதும் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நெல் மூட்டையை தனியாருக்கு விற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். நெல்லை தனியார் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பதால் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்