திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா வரும் 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா
x
திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா வரும் 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடைத் திறக்கப்படுவதுடன்,  விசுவரூப தரிசனமும். அதனைத்தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. இதனையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகமும் நடைபெறுகிறது.  இரவு சுவாமி தங்கச்சப்பரத்தில் வீதி உலா வரும் நடைபெறும். எனவே அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேப்பிலை மாரியம்மன் கோவில் வேடபரி திருவிழா



திருச்சி மாவட்டம், மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 28 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேடபரி திருவிழா நேற்று நடைபெற்றது. கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்ட அம்மன் திருவீதி உலா ராஜவீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. கோவிலில் இருந்து சாமி வெளியே வந்ததும் மழை கொட்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மணப்பாறை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து வந்தனர்.

பாணபுரீஸ்வரர் கோயில் வைகாசி பிரமோற்சவ விழா



பாணபுரீஸ்வரர் கோயில் வைகாசி பிரமோற்சவ விழா 50 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலத்துடன் நடைபெறுகிறது. ஐந்தாம் நாள் திருவிழாவில் யாகபூஜைகள் நடைபெற்று இரவு சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ஓலைச் சப்பரத்தில் எழுந்தருளி மேள வாத்தியங்கள் முழங்க நகரில் முக்கிய வீதிகளில் உலா வந்தது. வைகாசி விசாகப் பிரம்மோற்சவத்தையொட்டி வரும் புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்