வரிசையில் காத்துகிடக்கும் காலிகுடங்கள் ...கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் பரிதாபம்
பதிவு : மே 13, 2019, 05:19 PM
ஒசூரில் குழாய் அருகில் வரிசையாக காலி குடங்களை வைத்து, குடிநீருக்காக பெண்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தை கைவிட்டதன் எதிரொலியாக, மாநிலத்தின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தாண்டவமாடுகிறது. தளி வட்டத்திற்கு உட்பட்ட கலுகொண்டப்பள்ளி கிராமத்திலும், இதே நிலை தான். தண்ணீர் தொட்டிகள், குடிநீர் குழாய்கள் அருகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி குடங்கள் வரிசைகட்டி வைக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றதால், ஆழ்துளை கிணறு அமைத்தும் பயனில்லை என வேதனை தெரிவித்த அப்பகுதி மக்கள், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பஞ்சாயத்து நிர்வாகம் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

197 views

தங்கக் கடத்தல் - ஸ்வப்னா சுரேஷ் கைது

கேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

19 views

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

60 views

உயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு வழிகாட்டுதல்கள் - மத்திய மனிதவள அமைச்சகம் வெளியீடு

உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

295 views

ராகுல் மீண்டும் தலைவராக காங்கிரஸ் எம்.பி.,க்கள் வலியுறுத்தல் - சோனியாகாந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

66 views

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு - தொடர்ந்து 2வது வாரமாக ஞாயிறன்று முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும், இரண்டாவது முறையாக நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.