பத்ரேஸ்வரி கோயில் சித்திரை திருவிழா

மார்த்தாண்டம் அடுத்த கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் யானைகள் மீது பால்குட ஊர்வலம் நடந்தது.
பத்ரேஸ்வரி கோயில் சித்திரை திருவிழா
x
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை விழா ஒன்பதாவது நாளாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம், குறும்பேற்றி பகவதி அம்மன் கோவிலில் இருந்து ஏழு யானைகள் மீது பால்குட ஊர்வலம் புறப்பட்டது. ஒலிபெருக்கி மற்றும் பஜனை வாகனம் முன் செல்ல, பெண்கள் முளைப்பாரி சுமந்தபடி முன் சென்றனர். பூக்காவடி, சிங்காரி மேளம் போன்றவையும் ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தன. இந்த ஊர்வலம் மார்த்தாண்டம் பஸ் நிலையம், வெட்டுமணி, காப்புக்காடு, குன்னத்தூர், முன்சிறை, புதுக்கடை வழியாக கோயிலை சென்றடைந்தது. 

Next Story

மேலும் செய்திகள்