வடமாநில தொழிலாளர்கள் கிடைக்காமல் ரோஜா மலர் விவசாயிகள் தவிப்பு

அதிக வெயில் காரணமாக ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள ரோஜாமலர்க​ள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள்  கிடைக்காமல் ரோஜா மலர் விவசாயிகள் தவிப்பு
x
அதிக வெயில் காரணமாக ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள ரோஜாமலர்க​ள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகரிப்பால்  பசுமைகுடில்களில் பயிரிடப்பட்டுள்ள ரோஜாமலர்கள் அனைத்தும் செடிகளிலே கருகி வருகின்றன. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் ரோஜா செடிகளை பராமரிப்பதில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் வெயிலுக்கு கருகும் ரோஜா செடிகள் மற்றும் ரோஜாமலர்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்