தமிழகத்தை கடந்து கர்நாடகா செல்லும் கோதண்டராமர் - தென்பெண்ணை ஆற்றில் மண்பாலம் அமைக்கும் பணிகள் மும்முரம்

350 டன் எடையிலான கோதண்டராமர் சிலையை கொண்டு செல்வதற்காக ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மண்பாலம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தை கடந்து கர்நாடகா செல்லும் கோதண்டராமர் - தென்பெண்ணை ஆற்றில் மண்பாலம் அமைக்கும் பணிகள் மும்முரம்
x
திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள மலைகளில் செதுக்கப்பட்ட 350 டன் எடை கொண்ட  கோதண்டராமர் சிலை கர்நாடகா மாநிலம் ஈஜிபுராவில் உள்ள பழமையான கோயிலில் நிறுவப்பட உள்ளது. இதற்காக, 246 டயர்கள் கொண்ட பிரமாண்ட லாரியில்,  கோதண்டராமர் சிலை ஏற்றப்பட்டு, கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்த பிரமாண்ட கோதண்டராமர் சிலை பல தடைகளை தாண்டி ஒசூர் அருகேயுள்ள பேரண்டப்பள்ளி பகுதியில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பேரண்டப்பள்ளி பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் மீதுள்ள பாலத்தின் வழியாக சிலையை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளதால், ஆற்றின் கரையில் சிலையை கொண்டு  செல்ல வசதியாக தற்காலிகமாக மண்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடைந்ததும், அடுத்த சில நாட்களில் தமிழக எல்லையை கடந்து கர்நாடகா மாநிலத்துக்குள் சிலை செல்லும், தற்போது, பேரண்டப்பள்ளி பகுதியில் உள்ள சிலையை தினந்தோறும் ஏராளமானோர் வழிபட்டு செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்