ஏரியில் கலக்கும் மருந்து தயாரிப்பு ஆலைக் கழிவுகள் : மின் இணைப்பை துண்டித்து, அதிகாரிகள் அதிரடி

சுத்திகரிக்காத கழிவு நீரை ஏரியில் கலந்ததாக, மருந்து தயாரிப்பு ஆலையின் மின் இணைப்பை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.
ஏரியில் கலக்கும் மருந்து தயாரிப்பு ஆலைக் கழிவுகள் : மின் இணைப்பை துண்டித்து, அதிகாரிகள் அதிரடி
x
சுத்திகரிக்காத கழிவு நீரை ஏரியில் கலந்ததாக, மருந்து தயாரிப்பு ஆலையின் மின் இணைப்பை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். ஒசூர் சிப்காட்டில் மருந்து தயாரிப்பு ஆலை உள்ளது. அதிலிருந்து, வெளியேற்றப்படும் கழிவு நீர், விதிமுறைகளுக்கு புறம்பாக உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதை தொடர்ந்து இரவு நேரங்களில் அந்த ஆலையை கண்காணித்து வந்த அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது, விதிகளை மீறி தனியார் மருந்து தயாரிப்பு ஆலை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் அருகில் உள்ள பேடரப்பள்ளி ஏரியில் திறக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்