கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலான மழை பெய்தது.
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை
x
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலான  மழை பெய்தது. கொடைக்கானல் பகுதியில் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. பிற்பகலில் மேகமூட்டம் சூழ்ந்த நிலையில் மாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இடிமின்னலுடன் மழை பெய்தது. இதனையடுத்து குளுகுளு சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சிஅடைந்தனர். கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர்

ஊட்டியில் 2 மணி நேரம் கன மழை - விவசாயிகள் மகிழ்ச்சி : 



ஊட்டியில் இரண்டு மணி நேரம் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஊட்டியில் மிதமான சீதோசன நிலை நிலவிய நிலையில், கருமேகங்கள் சூழ ஊட்டி, அணிக்கோரை, தும்மனட்டி,  கப்பச்சி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்தது. சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மழை சிரமத்தை அளித்தாலும், தேயிலை மற்றும் காய்கறிகளை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்