நள்ளிரவில் ஓட்டலில் உணவு கேட்டு தகராறு - வெளியான சிசிடிவி கேமரா காட்சிகள்
பதிவு : மே 11, 2019, 07:17 PM
சென்னை மதுராந்தகம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஒட்டல் ஒன்று அமைந்துள்ளது.
இங்கு நேற்று இரவு 12 மணிக்கு கடை மூடப்பட்ட நிலையில், அங்கு மதுபோதையில் வந்த 5 இளைஞர்கள், உணவு கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது உணவு இல்லை என்று கூறிய ஓட்டல் மேலாளர் ஆனந்தனை தாக்கிய அவர்கள், ஓட்டலுக்குள் புகுந்து, கல்லாவில் இருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் கூச்சலிட்டவுடன் அந்த 5 இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் ஆனந்தன் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து 5 பேரை யும் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2349 views

பிற செய்திகள்

கார்த்தி சிதம்பரம் - அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வழக்கு

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வருமான வரி வழக்கின் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

23 views

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை - அக். 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..

8 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்

35 views

தூத்துக்குடி காவல்நிலையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை : மர்மகும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

366 views

"லட்சியங்களோடு மாணவிகள் வாழ வேண்டும்" - கமலாசத்தியநாதனை நினைவுகூர்ந்த முதலமைச்சர்

இந்தியாவில் முதல் பெண் பத்திரிகை தொடங்கிய கமலா சத்தியநாதனை போல் மாணவிகள் லட்சியத்துடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

13 views

சேதம் அடைந்துள்ள பழமையான பங்குனி அணைக்கட்டு : பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ்பங்குனி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.