4 நாட்களாக மனைவியின் சடலத்துடன் தங்கிய கணவன்?
பதிவு : மே 11, 2019, 06:19 PM
திருப்பூரில் பூட்டிய வீட்டுக்குள் இளம் பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டிக்கு அருகே நெசவாளர் காலனியில் தனியார் பனியன் நிறுவன தொழிலாளர்களின் குடியிருப்பு உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள வீட்டில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். திருமுருகன்பூண்டி காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்த போது வீட்டில் அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவர் சடலமாக கிடப்பது தெரிய வந்துள்ளது. விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த கயல்விழி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக கயல்விழியை காணாததால், அருகில் இருப்பவர்கள் அவரது கணவரான விக்னேஷிடம் விசாரித்துள்ளனர். கயல்விழி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக  விக்னேஷ் கூறியுள்ளார்.  இந்த தகவலை அறிந்த போலீசார் தலைமறைவாக உள்ள விக்னேஷை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

891 views

பிற செய்திகள்

எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்..? - இன்று அதிகாலை 5 மணி நிலவரம்

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை

0 views

எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிகை விபரங்களை தற்போது காணலாம்..

396 views

"பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து நிற்போம்" - தினகரன்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

85 views

தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்

நாட்டின் மிக பழமையான கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தேசிய கட்சி அந்தஸ்த்தை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

310 views

மத்திய சென்னை, திருச்சியில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி

மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

32 views

39 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தை கைப்பற்றிய தி.மு.க.

39 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் பாராளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது.

133 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.