குழந்தையை தத்தெடுக்க வழிமுறைகள் என்ன..?
பதிவு : மே 11, 2019, 09:06 AM
இந்தியாவில் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசின் வழிமுறைகள் எளிதாக இல்லை என்று கூறுபவர்கள், வெளிநாடுகளில் எளிமையாக உள்ளதாக கூறுகின்றனர்.
இந்தியாவில் குழந்தைகளை விற்கவோ, வாங்கவோ முயற்சிப்பவர்களுக்கு 3 முதல் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. இதேபோல் குழந்தைகளை தத்தெடுக்கவும் அரசு கடுமையான வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி குழந்தை வேண்டுவோர் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும். குழந்தை வேண்டும் தம்பதியினரின் திருமணம் மற்றும் வயது சான்றிதழ்களை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். 

45 வயதுக்கு மேற்பட்ட தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற மருத்துவ சான்றிதழை அளிக்க வேண்டும். குழந்தை தத்தெக்கும் தம்பதியருக்கு கண்டிப்பாக சொத்து இருக்க வேண்டும் வருமான சான்றிதழ் தேவையில்லை. 3 பேர் சிபாரிசு செய்ய வேண்டும். குழந்தையை தத்தெடுக்கும் தம்பதியருக்கு எதிர்பாரதவிதமாக எதுவும் ஆகிவிட்டால் அக்குழந்தையை வளர்க்க மற்றொரு தம்பதியர் உறுதி அளிக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன. 

ஆனால் வெளிநாடுகளில் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசின் வழிமுறைகள் எளிமையாக உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மட்டுமே குழந்தைகளை தத்தெடுக்க முடியும். அப்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் குழந்தையை தத்தெடுக்கும் தம்பதியருக்கு குற்ற பின்னணி உள்ளதா என்று ஆராயப்படுகிறது. குழந்தையை வளர்க்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் குழந்தையை தத்தெடுக்க தேசிய பதிவு ஆணையங்களில் மனு அளிக்க வேண்டும். அதை ஒரு குழு பரிசீலித்து சிபாரிசு செய்யும் தம்பதியரே குழந்தையை தத்தெடுக்க முடியும். சீனாவில் ஆரோக்கியமான தம்பதியர் அனாதை மற்றும் பெற்றோர்களால் வளர்க்க முடியாத குழந்தைகளை ததத்தெடுக்கலாம். ஒரு தம்பதியர் ஒரு குழந்தை மட்டுமே தத்தெடுக்க முடியும். இதேபோல் குழந்தையை தத்தெடுக்க, பல்வேறு நாடுகளில் எளிமையான வழிமுறைகளே உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

435 views

பிற செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது : 45 நிமிடம் வாக்குப்பதிவு பாதிப்பு

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிட்பட்ட தனக்கன்குளம் பகுதியில் உள்ள வாக்குசாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது.

15 views

"திமுக கூட்டணி வெற்றி வாகை சூடும்" - ஜோதிமணி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலத்தில் வாக்களித்தார்.

8 views

4 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் : அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும், 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

17 views

"திமுக மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" - சத்யபிரதா சாகு உறுதி

4 தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக 47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், அதிகபட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 52 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

85 views

மயிலாடுதுறை : களைகட்டிய தீமிதி திருவிழா

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

50 views

ராணிப்பேட்டை : சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ஓட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.