கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா கோலாகலம்

திருவாரூரில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடும் நிகழ்வை இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா கோலாகலம்
x
திருவாரூரில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் ஜெயந்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடும் நிகழ்வை இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 252 - ஆவது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர், ஸ்ரீசியாமா சாஸ்திரிகள் ஆகியோரது ஜெயந்தி விழாவையொட்டி ஆண்டுதோறும் திருவாரூரில் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான இசை நிகழ்ச்சிகள் தியாகராஜர் கோவிலில் கடந்த 6 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பிரபல கர்நாடக இசைப் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி குழுவினரின் பாட்டு கச்சேரியும், அக்கரை சகோதரிகள் என்று அழைக்கப்படும் எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எஸ்.சொர்ணலதா குழுவினரின் வயலின் கச்சேரியும் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்