மாகாளியம்மன் கோவில் பிரம்மோற்சவம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
மாகாளியம்மன் கோவில் பிரம்மோற்சவம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x
இந்த விழா கடந்த மாதம் 23ஆம் தேதி கணபதி ஹோமம் பொரிச்சாட்டுதலுடன் தொடங்கியது. இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பவனி வந்தார். இதனை அடுத்து குண்டு இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தலைமைப் பூசாரி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்