தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
x
மதுரை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை  பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் அவதிபட்டு வந்த நிலையில்,இன்று மதுரை புறநகர் பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது.  கடும் வெயிலில் அவதிப்பட்டு வந்த மதுரை மக்கள் இந்த மழையால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

வனப்பகுதியில் பெய்த திடீர் மழை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் அரை மணி நேரம், கன மழை நீடித்ததால் மலைக்கிராம மக்கள், மகிழ்ச்சியடைந்தனர்.  இப்பகுதியில் கடந்த சில நாட்களாக, கடுமையான வறட்சி நிலவி வந்தது.இந்நிலையில், திம்பம் மலைப்பாதை மற்றும் ஆசனூர் வனப்பகுதியில் அரை மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் ஆசனூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

சூறாவளி காற்றுடன் கனமழை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பேரணாம்பட்டு பகுதியில் 
சூறாவளி காற்றுடன் கனமழைபெய்தது.இதனால்சாலையோரம்உள்ள மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்தன. பல கட்டிடங்களின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் 
சாய்ந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் இருளில் மக்கள் அவதிப்பட்டனர். 

சூறாவளி காற்றுடன் திடீர் கனமழை

திருவள்ளூரில் திடீரென  சூறாவளி காற்றுடன் கன மழை  பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  கடந்த  சில நாட்களாக அனல் காற்று வீசி வந்த நிலையில் திடீர் மழையால் கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர். கனமழை காரசமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இடியுடன் கூடிய கனமழை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கத்திரி வெயில் வாட்டி  வந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்தது.  செவிலிமேடு, வாலாஜாபாத், பாலு செட்டி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உண்டாகி உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த காற்றுடன் மழை

ஸ்ரீவில்லிபுத்தூரில் திடீரென பலத்த காற்றுடன்  கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக அனல் காற்றி வீசி அவதிப்பட்டு வந்த மக்கள்,மழை பெய்து கோடை வெப்பம் தணிந்ததால் நிம்மதி அடைந்துள்ளனர்.

சூறாவளி காற்றுடன் கனமழை - மின்கம்பங்கள் சாய்ந்தன

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆரணி வந்தவாசி சாலையில் இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.மின்கம்பங்கள் சாய்ந்ததில் அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.

ராசிபுரம் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை 

ராசிபுரம் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கனமழையால் கிளைச் சிறை வளாகம் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. கோடை வெப்பத்தால் தவித்து வந்த ராசிபுரம் மக்கள், கனமழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

உதகையில் சூறை காற்றுடன் பெய்த கனமழை 

நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டாவது நாளாக சூறை காற்றுடன் கனமழை பெய்தது. கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட உதககையில் சுற்றுலாப்பயணிகள்  குடை பிடித்தபடி இயற்கை எழிலை கண்டு ரசித்தனர்.ரோஜா  மற்றும் தாவரவியல் பூங்காவில் குவிந்த மக்கள் மழையில் நனைந்தபடி மகிழ்ந்தனர்.தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் உதகையில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 




Next Story

மேலும் செய்திகள்