கொல்லிமலையில் 20 குழந்தைகள் மாயம் : காட்டிக்கொடுத்த பிறப்பு சான்றிதழ் - சுகாதாரத்துறை ஆய்வு

கொல்லிமலை பகுதியில் சுகாதாரத்துறை ஆய்வில் 20 குழந்தைகள் மாயமாகி உள்ளது தெரிய வந்துள்ளது
கொல்லிமலையில் 20 குழந்தைகள் மாயம் : காட்டிக்கொடுத்த பிறப்பு சான்றிதழ் - சுகாதாரத்துறை ஆய்வு
x
கொல்லிமலையில் பிறப்பு சான்றிதழ் உள்ள நிலையில் 20 குழந்தைகள் பெற்றோர்களிடம் இல்லாதது சுகாதாரத்துறையினர்  நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவி தலைமையில் 15 பகுதி நேர செவிலியர்களைக் கொண்ட சிறப்பு குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. கொல்லிமலையில் ஆய்வு மேற்கொள்ளும் இந்த குழுவினர், யார் யாரிடம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்வார்கள். மேலும் குழந்தைகள் சட்ட ரீதியாக தத்துக்கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்யவுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்