பொன்பரப்பி வன்முறையில் ஆடியோ வெளியிட்டவர் கண்டுபிடிப்பு - சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழர் உட்பட 2 பேர் கைது

பொன்பரப்பி வன்முறையில் ஒரு சமூகம் குறித்து இழிவாகப் பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டவர்களை பிடிக்க கலிபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் தலைமை நிறுவனத்திடம் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறையினர் உதவி கோரினர்.
பொன்பரப்பி வன்முறையில் ஆடியோ வெளியிட்டவர் கண்டுபிடிப்பு - சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழர் உட்பட 2 பேர் கைது
x
இந்நிலையில் சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார் இந்த ஆடியோவை வெளியிட்டது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை வரவழைக்கபட்ட செல்வகுமாரிடமும், அவருக்கு உதவிய வசந்திடமும் போலீசார் விசாரணை செய்தனர். இதனையடுத்து அவர்களை கைது செய்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்