இணையதள குற்றங்கள் தடுக்க நடவடிக்கை : அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்குமாறு ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இணையதள குற்றங்கள் தடுக்க நடவடிக்கை : அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு மீண்டும் விசாரித்தது. அப்போது, வாட்ஸ் ஆப்  சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாட்ஸ் அப் எந்த ஒரு தகவல்களையும் ஆவணங்களையும் சேமித்து வைப்பதில்லை எனவும் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படுவதாலேயே உலக அளவில் பிரபலமாகியுள்ளது எனவும் கூறினார். கூகுள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விசாரணை அமைப்புகளுக்கு நூறு சதவீதம் ஒத்துழைப்பு தருவதாகவும்  அரசு சார்ந்த அமைப்புகள் கேட்கும் தகவலை வழங்கி வருவதாகவும் தனியார் அமைப்புகள் கேட்கும் தகவல்களை தருவதில்லை என்றும் தெரிவித்தார். ட்விட்டர் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புலனாய்வு அமைப்புக்கு  தகவல்களை தர தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் மே 20 முதல் 27ம் தேதிக்குள் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல சமூக வலைதளங்களும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்